சங்கராபுரம் அருகே பாவாளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 4 September 2023

சங்கராபுரம் அருகே பாவாளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாவாளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா  கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி  தினசரி பாரதம் நடைபெற்று வந்தது தொடர்ந்து கழுகு மரம் ஏறுதல், காளி கோட்டை இடித்தல், ஊரணி பொங்கல், அம்மன் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் இன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர், தேர் கிராமத்தில் உள்ள முக்கிய வீதியில் வழியாக ஆட்டம் பாட்டத்துடன் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது இதில் பாவாளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தைச் சார்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad