விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு ஊர்வலம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்திய கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை, இன்று 09.09.2023– ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் முஸ்லிம் அமைப்பினரை நேரில் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 18.09.2023—ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அடுத்த 3-வது மற்றும் 5-வது நாட்களில் சிலை ஊர்வலமாக கொண்டுச் சென்று அனுமதிக்கப்பட்ட இடத்தில் சிலைகள் கரைக்கப்படும்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் உள்ளிட்ட முஸ்லிம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதிகள் வழியாக சிலை ஊர்வலம் செல்லும்போது, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் பள்ளிவாசல் நிர்வாகிகளை நேரில் அழைத்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வாங்கினார்.
No comments:
Post a Comment