கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய அளவில் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 9 September 2023

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய அளவில் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய அளவில் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு உயர் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களிடமிருந்து கடந்த 4.9.2023 அன்று சென்னையில் ஊக்கத்தொகை பெற்றனர்.

அந்த வகையில் தேசிய அளவில் பவர் வெயிட் லிவ்டிங் பவர் பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் பெற்றுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த யசோதா என்பவர்க்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இளைஞர் மற்றும்  விளையாட்டு துறை அமைச்சர் உதய நிதி  அவர்களிடமிருந்து தேசிய அளவில் பவர்பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றமைக்காக கள்ளக்குறிச்சி செக்கு மேட்டு தெருவை யசோதா அவர்களுக்கு வழங்கிய உயரிய ஊக்கத்தொகையான ரூ.3 லட்சத்தின் காசோலையை இன்று செப்டம்பர் 7ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் அவர்களிடம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை யசோதா காண்பித்து வாழ்த்து பெற்றார். 

No comments:

Post a Comment

Post Top Ad