மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தகவல். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 September 2023

மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தகவல்.


தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர்கள் சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான  பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் மார்டன் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் 11.09.2023 திங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று மற்றும் இரண்டு போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். ஐடிஐ முடித்தவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். 

மேலும் ஐடிஐ சேர்ந்து பயிற்சி பெற முடியாத 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வி தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்ஸாக சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.8,500 முதல் ரூ.10,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும் எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad