தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தகவல். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 September 2023

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தகவல்.


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL, IELTS, GRE. GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி  மனிதநேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும்.

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மானாக்கர்கள் தாம் விரும்பும் அயல் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார். தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad