தொழிலாளர் நிதி வளர்ச்சிக் கழக கடன் நிதி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 September 2023

தொழிலாளர் நிதி வளர்ச்சிக் கழக கடன் நிதி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.


தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-1991 முதல் 2011-2012 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என மாவட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தகவல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-1991 முதல் 2011-2012 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன்தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும். மேலும் இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad