கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் அதனை அவர்கள் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 9 September 2023

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் அதனை அவர்கள் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரக்கூடிய பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நேற்றும் இன்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள் பணியிட மாறுதலில் செல்ல உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இன்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.

அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அருகில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் பங்கேற்ற 35 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம் போன்ற பகுதிகளிலிருந்து 35 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வந்து பணிபுரிகின்றனர் என்றும், இவர்கள் அனைவரும் தற்போதைய கலந்தாய்வில் பங்கேற்று தங்களுடைய சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் செல்லலாம் என்று விரும்பிய நிலையில் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்று கூறப்படுகிறது.

அதாவது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 35 ஆசிரியர்கள் தங்கள் மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் செல்ல விரும்பியிருந்த நிலையில், அதற்கேற்றாபோல் இவர்களுக்கு 35 காலி பணியிடம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த 35 பேருக்கு 7 காலி பணியிடம் மட்டும் காட்டப்பட்டுள்ளது. வெறும் 7 காலிப்பணியிடம் மட்டுமே இருந்ததால் அந்த 35 ஆசிரியர்களும் தங்களுக்கு முழுவதுமாக காலி பணியிடம் காட்ட வேண்டும். 

இந்த 7 இடத்தை வைத்து நாங்கள் எப்படி 35 பேர் பணியிட மாறுதலில் செல்ல முடியும் என கேள்வி எழுப்பி கலந்தாய்வை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.  நடந்து முடிந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 6,7,8 வகுப்புகளில்100-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் அவர்களுக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டது, ஆனால் தங்களுக்கு மட்டும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்தான் கலந்தாய்வில் பணியிட மாறுதல் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது இதை நாங்கள் ஏற்கவில்லை.

ஓவிய ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தளர்வு போல தங்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad