திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 12 September 2023

திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில்  மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  செப்டம்பர்  12,  13,   14, ஆகிய தேதிகளில் மாநிலம் தழுவிய தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைமை அறிவுறுத்தலின்படி திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் இருந்து  நான்கு முனை சந்திப்பு சாலையில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகமான பாரத வங்கியின் முன்பு அக்கட்சியை சேர்ந்த 2500 மேற்பட்டோர் பேரணி சென்று விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் விவசாய விளைபொருளுக்கு உரிய விலை, மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கை விடுதல், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கை விடுதல் போன்ற பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் செய்தனர்.

   
இக்கூட்டத்தில்  மாவட்ட செயலாளர் கே.ராமசாமி மாவட்ட துணை செயலாளர்கள்  அ.சுப்பிரமணியன் மாவட்ட பொருளாளர் எம்.வெங்கடேசன் மாவட்ட செயற்குழு மு.கலியபெருமாள் எஸ்.தேவேந்திரன் இரா.கஜேந்திரன் என்.வேலு ஒன்றிய செயலாளர் கே.இரவி நகர செயலாளர் பி.எச். கிப்ஸ் நகரக் குழு PHK.பஷீர் அகமது AIYF மாவட்ட செயலாளர் எஸ்.விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறையினர் இப் போராட்டத்தை தடுத்து நிறுத்தி கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad