ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீர்ப்பனந்தல் நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடத்திற்குப் பழைய கதவு பொருத்தியுள்ள அவலம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 21 September 2023

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீர்ப்பனந்தல் நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடத்திற்குப் பழைய கதவு பொருத்தியுள்ள அவலம்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர்ப்பனந்தல் ஊராட்சி உள்ளது. இவ்வூராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.இப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சமையலறைக் கட்டிடம் பழுதானதைத் தொடர்ந்து அரசால் ரூ.8 இலட்சத்தி 99ஆயிரங்கள் ஒதுக்கப்பட்டு கட்டிடத்தின் பெரும்பகுதி நிறைவடைந்தநிலையில், அப்புதியச் சமையலறைக் கட்டிடத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைப் புதிதாகப் பொருந்தாமல் பழையதைப் பயன்படுத்தியுள்ளதால்  அப்பகுதியிலுள்ள பெற்றோர்கள்  மற்றும் சமூக ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அது மட்டுமல்லாது சமீபத்தில் எஸ்ஐடிஎஸ் திட்டம் 2023 -24ல்  சுமார் 20 இலட்சங்களில் புணரமைக்கப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டிடங்களில் மழைநீர் தேங்கி ஒழுகும் நிலையும் மின்சார வசதி ( ஒரு கட்டிடம் தவிர்த்து) இன்னும் செய்யாததால் போதிய வெளிச்சம் இல்லை, மேலும் தற்சமயத்திற்காக நடைபெறும் ஒரு கட்டிடத்தில் இரு பக்கங்களிலும் வெவ்வேறு வகுப்புகள் நடைபெற்றுவருகிறது.ஆனால் இடையில் ஒரு தடுப்புகூட வைக்காமல்  இருவேறு பாடங்களையும் ஒரே நேரத்தில் பயிலும் துர்பாக்கிய நிலை உள்ளது.


இதனால் இப்பள்ளியில் உள்ளக் குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி பெற்றோர்கள் , பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad