மின்வாரிய அதிகரியை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய நபர் கைது - கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 22 July 2023

மின்வாரிய அதிகரியை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய நபர் கைது - கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.

கடந்த 20.07.2023-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி (TNEB) பிரிவு அலுவலகத்தில், இளமின்பொறியாளராக பணிபுரியும் செல்லப்பிள்ளை என்பவருக்கு பிரமகுண்டம் கிராமத்தில் திருட்டுதனமாக மின்சாரம் எடுத்து போர் மோட்டார் இயக்குவது தொடர்பாக கிடைத்த தகவலில் போரில் ஆய்வு செய்த போது ராகேஷ் என்பவர் மின்வாரிய அதிகரியை அசிங்கமாக திட்டி, தாக்கிய, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ் இவ்வழக்கு தொடர்பாக விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மணிக்கம் அவர்கள் விசாரணை செய்ததில் வடபொன்பரப்பி இளமின்பொறியாளராக செல்லப்பிள்ளை அவர்கள் பிரமகுண்டம் கிராமத்தில் திருட்டுதனமாக மின்சாரம் எடுப்பதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது பிரமகுண்டம் கிராமத்தை தனக்கோடி மகன் ராகேஷ்(37) என்பவர் மின்வாரிய அதிகரியை அசிங்கமாக திட்டி, தாக்கிய, அவரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது தெரியவரவே இக்குற்ற செயலில் ஈடுப்பட்ட குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad