கேலோ இந்தியா கபாடி அணிக்கு ஆலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் தேர்வு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 12 June 2023

கேலோ இந்தியா கபாடி அணிக்கு ஆலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் தேர்வு.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் ஆலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள்  ஐ.அய்யனார், வெ.இருசன், ரா.ரவிபிரசாந்த், கோ.புவனேஷ்வரி, பி.சிவரஞ்சனி மற்றும் கா.அபிநயா ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட கேலோ இந்தியா  கபாடி அணியில் பயிற்சி  பெறுவதற்கு தேர்வாகி உள்ளனர்.


தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று 12.06.2023 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வருகை புரிந்த அனைவரையும் தலைமை ஆசிரியர் ஆ.செல்வக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மதிப்பிற்குரிய மு.தங்கம் அவர்கள் கலந்து கொண்டு கபாடி அணிக்கு தேர்வான மாணவர்கள் அனைவரையும் சால்வை அணிவித்து பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவித்தார். 


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கோ.சுதா, சூ.இராபர்ட் சகாயராஜ் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக ஆசிரியர் த.சசிக்குமார் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad