உளுந்தூர்பேட்டை கூவாகம் திருவிழா பற்றி நமது சொந்தங்களுக்கு ஒரு சிறு தொகுப்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 May 2023

உளுந்தூர்பேட்டை கூவாகம் திருவிழா பற்றி நமது சொந்தங்களுக்கு ஒரு சிறு தொகுப்பு.


உளுந்தூர்பேட்டை கூவாகம் திருவிழா பற்றி நமது சொந்தங்களுக்கு ஒரு சிறு தொகுப்பு.


குவாம் கிராமமானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு அமைந்து உள்ளது..


இந்த கிராமத்தில் அமைந்துள்ள திருக்கோயில் தான் அரவணுக்கு அமைக்கப்பட்டுள்ள கோயிலாகும் பாரதத்தில் அர்ஜுனனின் மகன் தான் அரவன். பாரதப் போரின் போது அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு ஆண்மகனை பலியிட வேண்டும் என்று கிருஷ்ணர் உபதேசம் செய்ய அதற்கு தகுதியானவர் அரவாண் தான் என்று தேர்வு செய்யப்படுகிறது.


திருமணமாகாத அரவணும் தன்னை பலியிடுவதற்கு ஒப்புக்கொள்கிறார் ஆனால் அவருக்கு ஒரு ஆசை, அவருக்கு திருமணம் ஆகி அதன் பிறகு அவர் இறக்க வேண்டும் என்பது அதற்காக கிருஷ்ணர் தன்னை பெண்ணாக மாறி அரவணை திருமணம் செய்து கொள்கிறார் அந்த இடம்தான் கூவாகம்.

இந்த நிகழ்வு தான் இந்த திருவிழா..


முதல் நாள் இரவு திருநங்கையை (கிருஷ்ணர்)திருமணம் செய்து, மறுநாள் அரவண் பலியிடப்படுகிறார் அவரை மனர்ந்த திருநங்கை கதறி அழுது தாலி அறுக்கிறார், அரவனின் உடல் உறுப்புகள் வெட்டப்பட்டு பல இடங்களில் சிதறுகிறது புராணத்தில் உள்ளது.


அவ்வாறாக தான் இன்றும் ஆராவணனின் உடல் உறுப்புகள் இந்த பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்களில் வைக்கப்பட்டு அங்கிருந்து தான் இந்த கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு முழு உருவம் செய்யப்பட்டு திருவிழாவின் இறுதி அன்று வீதி உலா சென்று அரவணன் பாகங்கள் பிரித்து எடுத்து செல்லப்படுகின்றனர்.


இந்த திருவிழா திருநங்கைகளுக்கு மட்டும் முக்கியமான திருவிழாவாக பார்க்கப்படுவதில்லை இந்தப் பகுதியைச் சார்ந்த மக்களின் ஏகபோக திருவிழா பத்து நாட்கள் பாரதம் படித்து சித்திரை மாதத்தில் இந்த திருவிழா நடைபெறுகிறது 10 மாதம் பாரதம் படித்து அரவணன் பலியிடும் ஒவ்வொரு திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திருவிழாவாக இந்த பகுதி மக்கள் கொண்டாடுகிறார்கள்.

 

இந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் தமக்கு வேண்டுதலாக அரவணிடம் வேண்டிக் கொண்டு தன்னுடைய வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாலி கட்டி மறுநாள் அந்த தாலியை அறுத்து அங்கே உள்ள ஒரு குளக்கரையில் சமர்ப்பிக்கிறார்கள்..


திருநங்கைகள் கிருஷ்ணரின் அவதாரமாக கொண்டு அவர்களின் கணவராக அரவணை ஏற்றுக் கொண்டு இங்கே வந்து தாலி கட்டிக் கொண்டு சந்தோஷமாக இருந்துவிட்டு அடுத்த நாள் காலை அவர்கள் கட்டிய தாலிகள் மற்றும் ஆபரணங்களை எல்லாம் கலைத்துவிட்டு வெள்ளை நிற புடவை அணிந்து விதவை கோளம் கொண்டு அவர்கள் தன்னுடைய கணவர் இறந்ததாக நினைத்து ஒப்பேரி வைத்து தங்களுடைய துக்கத்தை வெளிப்படுத்தி செல்வார்கள்..


இந்த அரவண் இறந்த இந்த நாள் உளுந்தூர்பேட்டை விழுப்புரம் திருக்கோவிலூர் சுற்று கிராமங்களில் அழிவு காலமாக எண்ணி அதிலிருந்து மூன்று நாட்களுக்கு இந்த பகுதியில் எந்தவிதமான ஒரு நல்ல காரியங்களும் செய்ய மாட்டார்கள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருவிழா தான் இந்த திருவிழா.

No comments:

Post a Comment

Post Top Ad