அருள்மிகு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 May 2023

அருள்மிகு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு.


அருள்மிகு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு.    


                              

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழாவில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் ஷரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையங்களில் கலெக்டர் ஷரவன்குமார் ஆய்வு மேற்கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.


தொடர்ந்து எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பார்வையிட்டு திருவிழாவிற்கு வருகை புரிந்துள்ள பொதுமக்கள் திருநங்கைகள் மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொண்டு ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் திருவிழாவில் திருநங்கைகளுக்கு இடையூறு அளிக்காமல் அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மோகன்ராஜ், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சிவாகரன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க துணை இயக்குனர் ஜானகிராமன்,உதவி இயக்குனர்கள் தங்கவேல், முத்துக்குமாரசாமி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலர் செல்வம், உளுந்தூர்பேட்டை துணை போலிஸ் சூப்பிரண்டு மகேஷ், தாசில்தார் ராஜு, திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், செல்வபோதகர், கூவாகம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad