கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சரஸ்வதி திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதை எடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக விழுப்புரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கிருஷ்ண பிரியா நியமிக்கப்பட்டார் தொடர்ந்து அவர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்
பின்னர் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் இடை நிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணம் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கல்வராயன் மலைவாழ் மாணவர்கள் கல்வி கற்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
புதிதாக பொறுப்பேற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள்( தொடக்கப்பள்ளி) ராஜி (தனியார் பள்ளி) துரைராஜ் இடைநிலைப்பள்ளி( பொறுப்பு) ராமச்சந்திரன் நேர்முக உதவியாளர்கள் கோபி, ஆனந்தன், கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக அவர் மாவட்ட கலெக்டர் சரவணக்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
No comments:
Post a Comment