வரலாற்றில் முதல்முறையாக உளுந்தூர்பேட்டையில் "மிஸ் கூவாகம் 2023" அழகி போட்டி - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 2 May 2023

வரலாற்றில் முதல்முறையாக உளுந்தூர்பேட்டையில் "மிஸ் கூவாகம் 2023" அழகி போட்டி


வரலாற்றில் முதல்முறையாக உளுந்தூர்பேட்டையில் "மிஸ் கூவாகம் 2023" அழகி போட்டி உளுந்தூர் பேட்டையில் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்தரை திருவிழாவை முன்னிட்டு தென்னிந்திய திருநங்கைகள் சார்பாக திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகி போட்டியானது இந்த ஆண்டு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. 


இந்த ஆண்டு விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமாக பிரிந்தது அதில் கூவாகும் கோயில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் உளுந்தூர்பேட்டையில் மிஸ் கூவாகம் அழகி போட்டி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


அதன் ஒரு பகுதியாக முதல் சுற்று அழகி போட்டி இன்று உளுந்தூர்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது.


இதில் திருநங்கைகள் ஏராளமானோர் வெளியூர்களிலும் இருந்தும் வெளி மாவட்டங்கள், வெளிய மாநிலங்கள், வெளிநாடுகள் இருந்து ஏராளமான திருநங்கைகள் வந்து மிஸ் கூவாகம் அழகி போட்டியில் கலந்து கொண்டனர்.


இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வான் குமார் , திமுக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் எம் எல் ஏ, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் எம் எல் ஏ, உளுந்தூர்பேட்டை நகர் மன்ற தலைவர் திருநாவுக்கரசு, உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு பெரும் தலைவர் ராஜவேல், திருநாவலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி மற்றும் திருநங்கைகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad