தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி எதிர்வரும் 10 ந்தேதி முதல் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும் எதிர்கால போராட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (02.05.2023) பின்வரும் விபரப்படி பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
அதுசமயம் காலை 10.35 மணிக்கு சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்,நண்பகல் 11.15 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 12.00 மணிக்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 12.15 மணிக்கு கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாலை 1.15 மணிக்கு சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 3.35 மணிக்கு திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 4.00 மணிக்கு திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் 5.30 மணிக்கு உளுந்தூர்ப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.
நமது மாநில மையம் முன்னெடுத்துள்ள போராட்ட வடிவங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி நமக்கான உரிமைகளை மீட்டெடுக்க ஒத்துழைப்பு வழங்கியும், மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் முண்ணனி உறுப்பினர்கள் பரப்புரையில் மாநில பொதுச் செயலாளருடன் கலந்துகொள்ளவும்
வட்டக் கிளை நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், புதிய தோழர்கள் மற்றும் அனைத்து தோழர்களையும் (குறுவட்ட வருவாய் ஆய்வாளர், தனி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட) பங்கேற்கச் செய்ய உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து வட்டக் கிளை நிர்வாகிகளையும் மாவட்ட மையத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment