இரவு கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. தாரணேஸ்வரி தலைமையில் காவலர்கள் மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டபோது காவல்துறையினரை கண்டதும் (TN 11 J 9226 மற்றும் TN 15 U 1378) பதிவெண் கொண்ட இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில் வாகனத்தை சோதனை செய்தபோது லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்து கள்ளச்சாரம் சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டது, மேலும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டு சொல்லப்பட்டது. இக்குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மோகன்ராஜ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment