வணிகர் சங்கங்களின் அமைப்பினர் பேரணி. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 May 2023

வணிகர் சங்கங்களின் அமைப்பினர் பேரணி.


வணிகர் சங்கங்களின் அமைப்பினர் பேரணி.       


கள்ளக்குறிச்சி. வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் 40-வது மாநில மாநாட்டில் கள்ளக்குறிச்சி வணிகர்கள் கலந்து கொள்ளும் வகையில் வணிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஒற்றுமையை நிலை நிறுத்தும், வகையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.இதற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். 



பேரணி கள்ளக்குறிச்சி மந்தவெளி திடலில் இருந்து புறப்பட்டு காந்தி ரோடு, சேலம் ரோடு, வழியாக வந்து மீண்டும் மந்தைவெளி திடலில் முடிவடைந்தது.


இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad