கள்ளக்குறிச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 April 2023

கள்ளக்குறிச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் பல்லாண்டு காலம் போராடி பெற்ற 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துகிற தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் தலைமை வைத்தார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் வளர்மதி துவக்கி வைத்து பேசினார்.


இதில், மாவட்ட பொதுச் செயலாளர் சௌரிராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் அப்பாவு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆண்டாள், வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம், மாவட்ட குழு உறுப்பினர் கலியபெருமாள், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருண், தொலைத் தொடர்பு சங்க நிர்வாகி அழகிரி, மாவட்ட குழு உறுப்பினர் ராஜி, மாதர் சங்க கன்வினர் ரீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad