பேரால் கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் தோண்டும் பணி - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 April 2023

பேரால் கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் தோண்டும் பணி


பேரால் கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் தோண்டும் பணி


கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரால் கிராமத்தில் நீண்ட நாட்களாக புதிய குளம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.


அதைத் தொடர்ந்து, வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ அப்பகுதி மக்களின் கோரிக்கையை கனிவோடு பரிசினை செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன்பின் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சமும், பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சமும் மொத்தம் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் வெட்டுவதற்கு அரசு அதிகாரிகளுக்கு அறிவுரைத்திருந்தார்.


அதன்படி, பேரால் கிராமத்தில் புதிய குளம் வெட்டுவதற்கான பணிகள் இரவு பகலாக பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


இப்பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக பொருளாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆதி கு கோவிந்தராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு முறையாகவும் சிறப்பாக செயல்படுத்த அறிவுரைத்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad