சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 April 2023

சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.


சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவர் ஷா நவாஸ் கான் தலைமை தாங்கினார்.  மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி, மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் சையத் கவுஸ், தொகுதி செயலாளர் பாபு, தொகுதி பொருளாளர் ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அங்கீகரிக்கும் வாழ்வியல் நெறியே சமூக ஜனநாயகம். சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் இவை மூன்றும் தனித் தனி அங்கமாகக் கருதப்படக் கூடாது. இவை மூன்றும் ஒன்றிணைந்து விளங்க வேண்டும். ஒன்றிருந்து மற்றொன்று இல்லையெனில், அது ஜனநாயகத் தன்மையின் நோக்கத்தையே அழித்து விடும் என எடுத்துரைத்த டாக்டர் அம்பேத்கரின் கனவை நனவாக்க, எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக உறுதி ஏற்கும் நிகழ்வாக சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியின் நோக்கம் என மாவட்ட தலைவர் முகமத் ரபி கூறினார். 


இந்நிகழ்வில் டாக்டர் தாஜுதீன், ஜமாத் நிர்வாகிகள் சலிம் ஜான், ஷாகுல், நூர்பாஷா, கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சரவணன், அமமுக நகர செயலாளர் ராம்குமார், மக்கள் அதிகாரம் ராமலிங்கம்,சமூக ஆர்வலர் இளையராஜா,முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ரஷீத் கான், மாவட்ட துணை தலைவர் தஸ்தகீர் உட்பட 250 நபர்கள் கலந்து கொண்டார்கள். நகர தலைவர் ஆசாத் அலி நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad