இன்னுயிர் நீர்த்த 66 தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 April 2023

இன்னுயிர் நீர்த்த 66 தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி.


கடந்த 1944 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறிய பெரும் தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மும்பை தீயணைப்புத் துறையை சார்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் பலியானார்கள் அவர்களின் நினைவாக இன்று இன்னுயிர் நீர்த்த வீரர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள தீயணைப்புத் துறையினர் நினைவு அஞ்சலி செலுத்தினர், அதன் ஒரு பகுதியாக,கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் பொறுப்பு சக்திவேல் தலைமையில், நிலைய வீரர்கள் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில்  இன்று முதல் 20-ம் தேதி வரை தீ தொண்டு வாரமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர், அதன்படி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தீ விபத்தினை தவிர்க்கும் வழிமுறைகள் மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad