மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைபட்டாக்கள் விரைவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!!! - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 28 March 2023

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைபட்டாக்கள் விரைவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைபட்டாக்கள் விரைவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், அறிவிப்பு.


கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தலைமையில் இன்று (28.03.2023) நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் மீது தனி கவனம். செலத்தும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்து பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் சென்றடைவதற்காகவும், அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்வதற்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி, இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 'மாற்றத்திறனாளிகளுடைய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 229 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்கள்) மீதான நடவடிக்கைகளை தொடர்புடைய துறைகளுக்கு அனுப்புப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளபடும். நடவடிக்ககைள் குறித்த விவரங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வழியாக தெரியப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அட்டை வைத்திருப்பவர்கள் அரசின் அனைத்து நலதிட்டங்களையும் பெறுவதற்கு தகுதியுடையாராவர்.


மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, தேசிய அடையான அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 35 சதவீதம் பேருந்து பயண சலுகைகள், சுய தொழில்துவங்க வங்கி கடன், சிறப்பு சக்கர நாற்காலி, முடநீக்கு உபாரணங்கள், மோட்டார் பொருத்திய தைலல் இயத்திரம், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் அனைத்து நலத்திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கிட அறிவுறுத்தியதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நீர்நிலைகள் அல்லாத இடங்களில் வசிப்பவர்களுக்கும், தரிசு, நத்தம், புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு விரைவில் இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்படும். இச்சிறப்பு குறைநீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 9 ஆயிரம் மதிப்பிலான போட்டார் பொருத்திய தையல் இயந்திரம் ரூ.108000மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவர் சு.சுப்ரமணி, பல்வேறு மாற்றுத்திறனாளி நலசங்கங்கள், அரசு அலுவாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad