கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் தொடர்ந்து வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் பொதுமக்கள் பெரும்பாலானோர் கருத்தின் அடிப்படையிலும், தனியார் பேருந்து உரிமையாளர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து கருத்து கேட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்டு வருகின்ற 31.03.2023-ந் தேதி வெள்ளிகிழமை முதல் சேலம் சென்னை தேசிய - நெடுஞ்சாலையில் இருந்து சங்கராபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி நகர பேருந்துநிலையத்திற்கு ஏமப்பேர் பைபாஸ் வழியாக செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளின் பாதையில் மாற்றம் செய்யப்பட்டு நேராக சென்னை புறவழிச் சாலையில் சென்று சாமியார் மடம் வழியாக இடது புறம் வளைந்து ஏகேடி பள்ளி சாலை வழியாக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம், சங்கராபுரம் மற்றும் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் என்றும்
அதன் தொடர்ச்சியாக பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் சேலம் மற்றும் சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் நான்கு முனை சந்திப்பு கடந்து அண்ணா நகர், ஏமப்பேர் புறவழிச் சாலை வழியாக வெளியேறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் வழக்கமான பாதையிலேயே செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் தொடர்பாக கள்ளக்குறிச்சி நகர பொதுமக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள், பயணிகள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment