சங்கராபுரத்தில் வளையல் கடை தீப்பிடித்து எரிந்தது - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 March 2023

சங்கராபுரத்தில் வளையல் கடை தீப்பிடித்து எரிந்தது

சங்கராபுரத்தில் வளையல் கடை தீப்பிடித்து எரிந்ததில் ரூ.7 லட்சம் பொருட்கள் சேதமானது, வளையல் கடை சங்கராபுரம் நகைக்கடை வீதியை சேர்ந்தவர் டூங்கர் சிங் மகன் விக்ரம் சிங் (வயது 28). இவர் சங்கராபுரம் கடை வீதியில் வாடகை கட்டிடத் தில் வளையல் கடை நடத்தி வருகின்றார். நேற்று முன்தி னம் இரவு வியாபாரம் முடிந்ததும் விக்ரம்சிங் கடையை பூட்டிவிட்டு வீட் டுக்கு சென்றார்.


இந்த நிலை யில் நேற்று அதிகாலையில் கடையில் இருந்து புகை வெளியேறியது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி விக்ரம் சிங்கிற்கு தகவல் கொடுத்தனர்.



அதன் பேரில் அவர் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடை தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. போலீசார் விசாரணை இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி தீய ணைப்பு நிலைய அலுவலகத் துக்கு தகவல் கொடுத்தார்.


 

அதன்பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமை யிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.



இருப் பினும் கடையில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தீவிபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.                    

 

செய்தியாளர் நூர் முகமது

No comments:

Post a Comment

Post Top Ad