இன்று 28.03.2023-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆக்சாலிஸ் தனியார் பள்ளி வளாக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவியர்களை கொண்ட போதை தடுப்பு குழுவினருக்கு ‘போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்’ நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதை பொருள் பயன்பாட்டில் இருந்து இளைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் பயன்படுத்தினால் உடல்நலம், மனநலம், குடும்ப நலம், தொழில் பாதிப்பு மற்றும் சமூகநல பாதிப்பு போன்றவை ஏற்படும். இளம் வயதில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்களின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு குடும்பம் சீர்கெடுவதோடு இந்த சமூகமும் பாழடைந்து விடும்.
எனவே, இதனை சரி செய்து போதையில்லா மாவட்டத்தை உருவாக்கிட இளைஞர்களாகிய நீங்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகாமலும், அப்படி அடிமையானவர்கள், தெரிந்தவர்களாகவும், நண்பர்களாகவும் இருந்தால் மனநல சிகிச்சை அளித்திட இலவச ஆலோசனை எண்- 10581-க்கு அழைத்து ஆலோசனை பெறலாம். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு பிரத்யேக வாட்ஸ் ஆப் 73581-54100 எண்ணிற்கோ, காவல்துறை அவசர உதவி எண் 100 -க்கோ தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என கூறினார்,
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. ஜவஹர்லால், திரு. விஜய் கார்த்திக் ராசா, துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.இரமேஷ், திரு.மகேஷ், திரு.திருமேனி, திரு. இராவிச்சந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment