கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சிவாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 7ஆம் ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் டாக்டர்.ஆர்.சிவபிரகாசம், வினோதினி சிவபிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது,
பள்ளியின் முதல்வர் ரம்யா அனைவரையும் வரவேற்று பேசினார், நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கவியரசர் கண்ணதாசன் அவர்களின் மகள் விசாலி கண்ணதாசன், சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர் கிங்காங் சங்கர், விருந்தினர்களாக தொழிலதிபர் ஏ.கே. முருகன், சரவண செந்தில்குமார், சிறப்பு பேச்சாளர் வைப்ரேஷன் வீரா ஆகியோர் பங்கேற்றனர்,
விழாவில் பள்ளி மழலை செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள், டிராமா நிகழ்ச்சிகள் நடைபெற்றது, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது,
ஆண்டு விழாவில் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment