கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நேற்று இரவு சென்னையிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்த பொழுது உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் அதே திசையில் எதிரே சென்று கொண்டிருந்த கனரக லாரியின் மீது மோதிய விபத்தில் ஒரு மாணவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார், மற்றொரு மாணவர் பலத்த அடிபட்டு இருந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது, அங்கு சிகிச்சை பலனின்றி மற்றொரு மாணவரும் உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட பொழுது விசாரணையில் மாணவர்கள் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த மாலிக் மகன் அஸ்வாக் 20, மற்றும் அப்துல் காதர் மகன் முகமது பகீம் 20, ஆகிய இருவரும் சென்னையில் உள்ள கல்லூரியில் பயின்று வருவதாகவும், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும் தெரிய வந்தது, மேலும் இவ்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment