மே 1 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 28 April 2023

மே 1 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு


மே தினம் 01.05.2023 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் அறிவிப்பு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 01.05.2023 மே தினம் (திங்கள்கிழமை) அன்று அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தெரிவித்துள்ளார்.


கள்ளக்கறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் மதுபானக் கூடங்கள் மற்றும் அரசு மதுபான கடைகள் எதிர்வரும் 01.05.2023 (திங்கள்கிழமை) மே தினத்தன்று மூடப்பட் வேண்டும் என மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்கள் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, எதிர்வரும் 01.05.2023 மே தினம் திங்கள்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இயங்காது என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad