கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாடிய கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் காவல்துறையினர்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்களை பாதுகாக்கும் கடுமையான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இரவு பகல் பாராமல் மாவட்ட சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர்களை கெளரவிக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்,. அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி சிவசக்தி திருமலை திருமண மண்டபத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உரையாடிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண்கள் இன்று நாட்டில் பல்வேறு துறைகளில் ஆகச்சிறந்த அளப்பரிய சாதனையை நிகழ்த்தி வருகிறார்கள். பெண்களின் சம உரிமையிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் நாம் உறுதுணையாக இருப்போம் எனவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் ஒவ்வொரு தனிமனிதனும் கடமைப்பட்டவர்கள் என்றும் உரையாற்றினார்.
இந்த மகளிர் தினவிழா கொண்டாட்டத்தில் பெண் காவலர்களுக்கு பாட்டு போட்டி, கட்டுரை போட்டி, ஒவியா போட்டி இசை நாற்காலி, ஊசி நூல் கோர்த்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு பரிசுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பொற்கரங்களால் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment