கள்ளக்குறிச்சியில் மகளிர் விழிப்புணர்வுப் பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 8 March 2023

கள்ளக்குறிச்சியில் மகளிர் விழிப்புணர்வுப் பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சியில் மகளிர் விழிப்புணர்வுப் பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.


  கள்ளக்குறிச்சி,மார்ச்,08.கள்ளக்குறிச்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு "பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்தின்கீழ் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என் மோகன்ராஜ் முன்னிலையில் இன்று (08.03.2023) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.



இப்பேரணியில் மகளிர் சுய உதவி குழுக்கள், தனியார் கல்லூரி மாணவிகள் பங்கேற்று "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டம் தொடர்பான பதாகைகளும், ஆணுக்கு பெண் சமம், பாலின சமத்துவம், பெண் குழந்தைகளின் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தொலைப்பேசி எண்கள் உள்ளிட்ட விழிப்புணர்வுப் பதாகையை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட மகளிர்சுய உதவிக் குழுக்கள், தனியார் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். பேரணியானது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய சாலை வழியாகச் சென்று இறுதியாக மந்தைவெளியில் நிறைவுற்றது.



இப்பேரணியில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, கள்ளக்குறிச்சி காவல்துணை கண்காணிப்பாளர் இரா ரமேஷ், மகளிர் சுய உதவி குழுக்கள் தனியார் கல்லூரி மாணவிகள், சமூக நலத்துறை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad