கள்ளக்குறிச்சி,மார்ச்,08.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் வட்டார வளமையத்தின்மூலம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 15 வயதிற்கும் மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத நபர்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் தன்னார்வல ஆசிரியர்களுக்கு முதல் கட்டப் பயிற்சி வழங்கப்பட்டு, கற்போருக்கான கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து 2-ஆம்கட்டப் பயிற்சியாகத் தன்னார்வல ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேலும் வலுவூட்டும் வகையில் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி 07/03/2023 அன்று ரிஷிவந்தியம் வட்டார வளமையத்தின் சார்பில் அரியலூரில் நடைபெற்றது.
இப்பயிற்சியின் கருத்தாளர்களாக மருத்துவர் பார்த்திபன் வழக்கறிஞர் ராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் மற்றும் பணி நிறைவு செய்த தமிழாசிரியை பானுமதி ஆகியோர் கலந்துகொண்டுத் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) ராமலிங்கம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பால்தாஸ் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் இப்பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, மோகன சௌந்தரராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment