இவரது விவசாய நிலத்தின் அருகே விவசாய நிலம் வைத்துள்ள பாலாஜி கோவிந்தன் அப்துல்கபூர், கவுஸ்பாஷா உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பலர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள பொதுப் பாதையை பயன்படுத்தி வந்தனர், இந்நிலையில் மாற்றுத்திறனாளி விவசாயி ஜெயபாலுக்கும் பக்கத்துல நில உரிமையாளர்களுக்கும் நான்கு பேருக்கும் முன் விரோதம் காரணமாகபாதை தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 7- தேதி ஜெயபால் தனது நிலத்தில் சாகுபடி செய்திருந்த கரும்பை முதல் கட்டமாக 20 டன் கரும்பை அறுவடை செய்தார் அறுவடை செய்த கரும்பை டிராக்டரில் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியதுடன் பொதுப்பாதையில் மரத்தால் ஆன கேட்டுகள் அமைத்து முன்விரதம் காரணமாக தடுத்து நிறுத்தி உள்ளனர்
மேலும் 10 நாட்களுக்கு மேலாக அறுவடை செய்த கரும்புகள் முற்றிலும் கரும்பு காட்டில் காய்ந்துசேதமடைந்ததால் மன வேதனையுடன்ஜெயபால் கண்ணீருடன் கதறி அழுதபடியே ஒரு ஊனமுற்ற விவசாயி என்று கூட பார்க்காமல் என் கரும்பினை அறுவடை செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கரும்பு காட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட பொன்பரப்பி காவல்துறையினர் ஜெயபாலை சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் மேலும் ஜெயபால் அளித்த புகாரின் பேரில் வட பொன்பரப்பி காவல்துறையினர்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment