கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் நரசிம்ம ஜோதி, ராயப்பன் தலைமையில் காவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது சந்தேகத்தின் பெயரில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை ஆய்வு செய்யும்போது 1. மணிகண்டன். வயது 22 தந்தை பெயர் காசி முத்து. 2. அஜித் வயது 20 தந்தை பெயர் அம்மாச்சி.3. தவமணி வயது 18 தந்தை பெயர் காமராஜ் ஆகிய மூவரும் பெரம்பூர் கிராமம் கல்வராயன் மலை பகுதியை சேர்ந்தவர்கள். சுமார் 240 லிட்டர் கள்ளச்சாராயத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வது தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனங்களையும் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர், அதன் பிறகு சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் நரசிம்ம ஜோதி, ராயப்பன் முன்னிலையில் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவுபடி கள்ளச்சாராயம் மற்றும் போதை ஒழிப்பை சங்கராபுரம் போலீஸார் சிறப்பாக செய்து வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment