கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 15 February 2023

கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.



கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் திரு ரவிச்சந்திரன் அவர்களின் ஆலோசனை படி பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் இணைந்து செய்த ஏற்பாட்டின் பேரில் சுமார் 150  அறிவியல் கண்டுபிடிப்புகள் மாணவர்கள் மூலம் காட்சிக்கு வைக்கப்பட்டன.

      
இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில்,பள்ளி மேலாண்மை குழு மற்றும் சிவகாமி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் கல்வியாளர் ஆ.கோபி   அறிவியல் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மாணவர்கள் படைப்புகளை பார்வையிட்டனர்.

இதில் சிறந்த முறையில் அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து சாதனை படைத்த மாணவர்களை தேர்வு செய்து சிவகாமி அகாடமி விருது2023 வழங்கப்பட்டது.


  
அது சமயம் அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்.

        
இந்த அறிவியல் கண்காட்சி அனைவரையும் ஊக்கப்படுத்தி உள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad