கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது ; 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் கொள்ளை சம்பந்தமான குற்றவாளியை விரைவாக பிடிக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவிட்டிருந்தார்
இந்நிலையில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், மற்றும் குற்றப்பிரிவு போலீசார்கள் இன்று ஏமப்பேர் புறவழிச்சாலையில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கோகுல் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து கோகுலை கைது செய்து, அவரிடமிருந்த 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment