10ம் வகுப்பு கல்வித் தகுதியில் ஒன்றிய அரசால் தமிழ் வழி எழுத்து தேர்வு வாயிலாக வேலை வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒன்றிய மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டி தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக்சன் கமிஷன் பல்வகை பணியாளர் பணிக்கு ஆப்ரேட்டர், பியூன், கேட் கீப்பர்கள், காவலாளி, ஜூனியர் ஆபரேட்டர், தோட்டக்காரர், ஹவல்தார் உட்பட 11 409 காலி பணியிடங்களுக்கு தேர்வு வாயிலாக விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது. விண்ணப்பிக்க கடைசி நாள் 17. 2 .2023 ஆகும். இத்தேர்விற்கு https//ssc.inc.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு 01.01.2023ம் நாளன்று 18 வயது முதல் 25 உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எஸ் சி அல்லது எஸ்டி பிரிவினருக்கு ஐந்தாண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் உச்ச பட்ச வரம்பில் தளர்வு உண்டு.
இந்த காலி பணியிடங்களுக்கு ஒரே கணினி வழி எழுத்து தேர்வாக தமிழில் இரண்டு பிரிவுகளில் 1.00மணி 30 நிமிடங்களுக்கு நடைபெறும். முதல் பிரிவில் 45 நிமிடங்களுக்கு 40 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். (மேலும் இப்பிரிவில் ஒவ்வொரு சரியான கேள்விக்கும் 3 மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் கழித்தம் கிடையாது).
இரண்டாவது பிரிவுகளில் 45 நிமிடங்களில் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். (மேலும் இப்பொழுவில் சரியான கேள்விக்கு 3 மதிப்பெண்களும் தவறான கேள்விக்கு 1 மதிப்பெண்ணும் கழித்தம் செய்யப்படுவதோடு) இறுதி பட்டியலுக்கு இப்பிரிவில் 150 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். ஹவல்தார் பணிக்கு கூடுதலாக உடற் தகுதி தேர்வு நடத்தப்படும்.
8. 2. 2003 புதன்கிழமை அன்று மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் படிக்க வேண்டிய பாடங்கள் அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் பாடக்குறிப்புகள் போன்றவை குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதி உடைய இளைஞர்கள் மேற்கண்ட தேர்விற்கு நேரடியாக தாங்களோ இணைய வழியாகவோ அல்லது இவ்வலுவலகத்திற்கு வந்து இணைய வழியாகவோ விண்ணப்பிக்க அறிவித்தப்படுகிறது.
18 /63 நோபால் தெரு, கள்ளக்குறிச்சி 606402 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வருகை புரிந்து 8 .2. 2023 அன்று நடைபெற உள்ள வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் ,தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 .00மணி முதல் 1.00 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷரவன் குமார் மற்றும் இ.ஆ.ப தகவல் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment