கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 9 February 2023

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது



இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும். நோக்கத்தை கருத்தில் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும்,  கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ளபட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வளர் சண்முகம், மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்துகொண்டு  உறுதிமொழி ஏற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad