ரிஷிவந்தியம் அடுத்த ஹரிணி பள்ளியில் அறிவியல் கண்காட்சி - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 7 February 2023

ரிஷிவந்தியம் அடுத்த ஹரிணி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ரிஷிவந்தியம் அடுத்த ஹரிணி பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.                     கள்ளக்குறிச்சி,பிப்08.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த ஓடியந்தல் ஹரிணி  மழலையர் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை பள்ளித் தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்தார்.

                       

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பகண்டை கூட்டுச் சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூரியா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சோலை மற்றும் ஜெயராமன் ஆகியோர் அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.அக்கண்காட்சியில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய ஏழு மாநிலங்களின் உணவு, உடை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் மாணவ மாணவியர்களால் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.2 முதல் 5 ம் வகுப்பு வரை பாடவாரியான அறிவியல் சோதனைகள் ஆன ஐந்திணைகள் பருவ மாற்றங்கள், ஏவுகணை, மனித உடல் பாகங்கள், சோலார் சிட்டி, மண்ணில்லா விவசாயம், உணவுப் பிரமிடு, மரங்களைக் காப்போம் மற்றும் அழிந்துவரும் மட்பாண்டங்கள் போன்றவை மாணவ மாணவியர்களால் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

                     

குறிப்பாக, பெண்களின் தற்காப்புக்குப் பயன்படும் வகையில் கண்டு பிடிக்கப்பட்ட மின்சாரக் கையுறை, கார்பன் டை ஆக்சைடு வாயுவைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி, தட்ப வெப்பநிலையை அறிய உதவிடும் செயற்கைக்கோள், ரயில் பாதையை வன விலங்குகள் கடக்கும்போது எச்சரிக்கும் கருவி என மாணவ, மாணவிகள் தங்கள் கற்பனைகளில் தோன்றிய அறிவியல் கருவிகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.அதுமட்டுமின்றி, தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகள் ,  தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. மேலும்,  பாரம்பரிய உணவு வகைகள் தயார் செய்தும்  வைக்கப்பட்டிருந்தன. இவை, பார்வையாளர்களாக வந்திருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் வியப்பில் ஆழ்த்தின என்றால் அது மிகையாகாது.

                  

அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளில் புவி வெப்பமயமாதல், நெகிழிப் பயன்பாடு தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மைத் திட்டம், நீர் வீழ்ச்சி, வடிவங்களின் அமைப்பு முறை, காடு வளர்ப்பு உள்ளிட்டவைகள் மிகச் சிறந்த படைப்புகளாக கருதப்பட்டன. கண்காட்சியில் திரளான பெற்றோர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பாராட்டையும் ஊக்கத்தையும் அளித்தனர்.கண்காட்சியின் நிறைவாக பள்ளியின் முதல்வர் சிற்றரசி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad