கல்வராயன் மலைப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் லாரி டியூபில் 300 லிட்டர் சாராயத்தை கடத்திய இருவர் அதிரடியாக கைது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் காய்ச்சுதல், கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கரியாலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்(தனிப்பிரிவு) திரு.ராமலிங்கம் தலைமையில் தனிப்படை காவலர்கள் தும்பராம்பட்டு, கடுக்கம்பட்டு பிரிவு ரோடு அருகே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது குரும்பலூர் பகுதியில் இருந்து பதிவெண் இல்லாத இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த செல்வமணி த/பெ முத்து மற்றும் சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்திக் த/பெ தங்கராஜ் என்பவர்கள் 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 5 லாரி டியூபில் சுமார் 300 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தவர்களை கைது செய்து. அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கடத்திய சாரயம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment