சங்கராபுரம் பகுதியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் சுமார் 18 இலட்சம் பணம் கையாடல் செய்த இருவரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் இயங்கிவரும் மதுரா மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கிளை மேலாளரான அய்யனார் என்பவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் தங்கள் நிதி நிறுவனத்தில் 2019-ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை பணியில் இருந்த 1) ஐயப்பன் த/பெ கண்ணுசாமி மரூர் கிராமம் 2) தினேஷ் த/பெ அழகுவேல் தேவபண்டடம் மற்றும் 3) ஐயப்பன் த/பெ ஏழுமலை மூக்கனூர் கிராமம் ஆகிய மூவரும் சுமார் 67 உறுப்பினர்கள் நிறுவனத்திற்கு செலுத்திய 17,98,965 /- ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக கொடுத்த புகாரில் சங்கராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவினை விசாரணை செய்ய உத்தரவிட்டார் அதன் படி மாவட்ட குற்றபிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம் விசாரணை செய்ததில் 1)ஐயப்பன்(33) என்பவர் 2019 முதல் 2022 வரை கிளை துணை மேலாளராக பணிபுரிந்த போது 12 உறுப்பினர்களிடமிருந்து 3,30,621/- ரூபாயும் மற்றும் அலுவலகத்தில் வங்கியில் கட்டியதாக 27,100/- ரூபாயும், 2)தினேஷ் என்பவர் 2019 முதல் 2022 ஆண்டு வரை நிறுவனத்தில் மக்கள் தொடர்பு பணியாளராக வேலை செய்தபோது 22 உறுப்பினர்களிடமிருந்து 6,31,600/- ரூபாயும் மற்றும் 3) ஐயப்பன் 2022 ஆண்டு நிறுவனத்தில் வேலை செய்தபோது 33 உறுப்பினர்களிடமிருந்து 8,36,744/- ரூபாய் என மூவரும் மொத்தம் 67 உறுப்பினர்களிமிருந்து மொத்த 18,26,065/- ரூபாய் பணத்தை போலியான கணக்கு வழக்குகள் மூலம் கையாடல் செய்தது தெரியவருகிறது. உடனடியாக இக்குற்ற செயலில் ஈடுபட்ட ஐயப்பன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள மற்றொரு குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment