உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும், மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, சுங்கச்சாவடி அருகே பாண்டிச்சேரியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் குறுக்கு சாலையை கடக்க முயன்ற போது தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், சாத்தனூர் கிராம பகுதியை சேர்ந்த. முத்துமணி என்பவரது மகன்கள் விக்னேஸ்வரன்(24),விஜய்முத்து (22), ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
இத்தகவலறிந்த
காவல்துறையினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்விற்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் விசாரணையில் சகோதரர்கள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தவர்கள் என தெரிய வந்தது, மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment