கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர், தா_உதயசூரியன் அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா,
உறுப்பினர் சேர்க்கை,பூத் கமிட்டி அமைத்தல், திமுக பணிகள் குறித்து
ஆலோசித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதில் சங்கராபுரம் தொகுதி மேற்பார்வையாளர் செஞ்சி_சிவா, உளுந்தூர்பேட்டை தொகுதி மேற்பார்வையாளர் டாக்டர் செ_வல்லபன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கேவி_முருகன், உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜவேல், உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் டேனியல்_ராஜ் உட்பட மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment