கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சுமார் 170 மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன, அவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும், அங்கு வசிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் எண்ணினர். அதன்படி மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றமடைய வேண்டும் என்றால் அவர்களில் பெரும்பாலானோர் அரசுபணிக்கு வரவேண்டும் அப்போது தான் வாழ்க்கை தரம் உயரும் மலைவாழ் கிராமங்களில் பெரும்பாலான இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக கள்ளக்குறிச்சி நகரத்திலுள்ள பயிற்சி மையத்திற்கு சென்று படிப்பதற்கும் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
எனவே கரியாலூர் காவல்நிலையம் அருகே உள்ள வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் முற்றிலும் இலவசமாக போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதன்படி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி முதல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது, சுமார் 128க்கும் மேற்பட்ட நபர்கள் பயிற்சி மையத்திற்கு வருகை புரிந்து இலவச வகுப்பில் படித்து வந்தனர் இந்த பயிற்சி மையத்தில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் குரூப் 4 பாடத்திட்ட குறிப்பேடுகள், புத்தகங்கள், நோட்டுக்கள் மற்றும் பேனாகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன் வகுப்பறைகள் Projector திரை மற்றும் கணினி மூலமாக உயர்தர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதுடன் வாரம் இருமுறை TNPSC மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வந்தது. தினமும் பயிற்சியின் போது மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் காலை, மாலை இருவேளை தேநீர் வழங்கி உற்சாகமாக படிக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்த இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் நன்கு அனுபவமுள்ள போட்டித் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கக்கூடிய திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது மேலும் வாரம் இருமுறை TNPSC Group 4 மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று 24.03.2023-ந் தேதி குரூப் IV தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் கல்வராயன் மலைவாழ் இளைஞர்களில் 11 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட மொத்தம் 15 நபர்கள் வெற்றி பெற்றுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் சார்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment