ஒழுங்குமுறை விற்பனை கூடங் களில் உளுந்து ஒரு குவிண்டால் ரூ.6,600-க்கு கொள்முதல் செய்யப் பட உள்ளது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்கு மார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உளுந்து கொள்முதல்
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உளுந்துக்கு தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலமாக அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டால் ஒன் றுக்கு ரூ.6 ஆயிரத்து 600-க்கு கொள்மு தல் செய்யப்படவுள்ளது. இதனால் வெளிச்சந்தை விலையை விட விவசா யிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தின் மூலம் வருகிற 29.5.2023-ந் தேதி வரை
கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்
ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் உளுந்து கொள்முதல் செய்யப் பட உள்ளது.
எனவே கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, தியாகதுருகம் ஆகிய ஒழுங் குமுறை விற்பனை கூடங்களில் முன்ப திவு செய்ய வேண்டும். உளுந்து விற்ப னையின் போது சிட்டா, அடங்கல் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.
பயன்பெறலாம்
பரிவர்த்தனை பணிகள் முடிவுற்றவு டன் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக பணம் வரவு வைக்கப் படும். எனவே உளுந்து சாகுபடி செய் துள்ள விவசாயிகள் அனைவரும் அரு கில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விற்பனை செய்து கூடுதல் வருவாய் பெற்று பயன் பெற லாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment