காரில் கடத்திவரப்பட்ட 30 கிலோ மான் கறி பறிமுதல் - தப்பியோடிய 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு... - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 20 March 2023

காரில் கடத்திவரப்பட்ட 30 கிலோ மான் கறி பறிமுதல் - தப்பியோடிய 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு...

காரில் கடத்திவரப்பட்ட 30 கிலோ மான் கறி பறிமுதல் - தப்பியோடிய 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு...


கச்சிராயப்பாளையம், மார்ச் 20- கல்வராயன்மலையில் காரில் கடத்தி வரப் பட்ட 30கிலோ மான்கறி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோ டிய 3 பேரை வனத்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகிறார்கள்.


வாகன சோதனை


கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் கச்சிராயப்பாளை யம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்ப குதியாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இங்கு மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குள் வசித்து வருகின் றன.


இந்த நிலையில் கல்வரா யன்மலை இன்னாடு வன சரகர் சந்தோஷ் தலைமையி லான வனத்துறை அதிகாரி கள் நேற்று மணியார்பாளை யம் சாலையில் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்ட எல்லை பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை மணியார் பாளையம் நோக்கி தி.மு.க. கொடியுடன் கார் ஒன்று வேக மாக வந்து கொண்டிருந்தது.


காரில் வந்தவர்கள் தப்பியோட்டம்


இதைபார்த்த வனத்துறை அதிகாரிகள் அந்த காரை ஓட்டி வந்தவரிடம் நிறுத்து மாறு சைகை காண்பித்தனர். ஆனால் வனத்துறையி னரை பார்த்ததும் காரில் வந்த 3 பேர் சற்று முன்னதாகவே காரை நிறுத்திவிட்டு. அதில் இருந்து இறங்கி ஓட் டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த வனத்துறை அதிகாரிகள் காரில் வந்தவர் களை பிடிப்பதற்காக விரட் டிச் சென்றனர். ஆனால் அவர்கள் வனப்பகுதிக்குள் ஓடி தலைமறைவாகி விட்ட னர்.


மான் கறி-கார் பறிமுதல் இதனிடையே அதிகாரிகள் காரை சோதனையிட்ட போது, காருக்குள் சிமெண்டு சாக்கு பையில் 30 கிலோ மான் கறி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைய டுத்து கார் மற்றும் மான்கறி ஆகியவற்றை வனத்துறையி னர் பறிமுதல் செய்து, தப்பி யோடிய நபர்கள் குறித்து அக் கம்பக்கத்தில் உள்ள மலை கிராமங்களில் விசாரணை நடத்தினர்.


விசாரணையில், காரில் 5 வந்தவர்கள் மணியார்பாளை ல் யத்தை சேர்ந்த ஆண்டிமகன் சக்தி கணேஷ், சின்னையன் மகன் ரமேஷ்குமார், ஈச்சங் காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் ராம நாதன் ஆகியோர் என்பதும், காரில் மான்கறியை கடத்தி வந்தபோது, அதிகாரிகளை பார்த்ததும் தப்பியோடியதும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்ப திவு செய்து, தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடி வருகி றார்கள்.


மேலும் தப்பியோடிய நபர் கள், மான்களை வேட்டை யாடி கறியை வெட்டி எடுத்து வந்தார்களா? அல்லது யாரிடம மாவது வாங்கி வந்தார்களா?. அல்லது இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?எனவும்தொடர்ந்து, விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கல்வராயன்ம லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad