தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்பட்ட 50-வது பொன்விழா ஆண்டில் சைக்கிள் பேரணியில் சென்ற வீராங்கனைகளுக்கு மலர் கொடுத்து வரவேற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு சேலம் மாவட்ட உதவி ஆணையர் திருமதி.லாவண்யா அவர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண் காவலர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணியாக சென்றவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பாக உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் சைக்கிள் பேரணி சென்ற வீராங்கனைகளுக்கு மலர் கொத்து அளித்து வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment