கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1975-76ஆம் கல்வியாண்டில் பள்ளி இறுதி வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம விழா சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிநிறைவுசெய்த உடற்கல்வி ஆசிரியர் பாஷா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பழைய மாணவர்கள் சந்திரசேகர், அருணாச்சலம், பால்ராஜ் மற்றும் கணேசன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர் குழந்தைக் கவிஞரும் நெடுமானூர் பாரதியார் தமிழ்ச்சங்கத் தலைவருமான கதிர்வேல் அனைவரையும் வரவேற்று வாழ்த்துக் கவிதை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியர்கள் முனுசாமி, மதியழகன் மற்றும் கணினி ஆசிரியர் பட்டு ராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் பழைய மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் மலரும் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். பழைய மாணவர்கள் பள்ளி சார்பில் மாணவர்கள் பயன்பெறும்வகையில் கழிவறையில் தொட்டி மற்றும் சின்டெக்ஸ் டேங்க் வைத்துத் தரப்பட்டது.இவ்விழாவை முனைவர் மாசிலாமணி ஒருங்கிணைத்தார். நிறைவாக பழைய மாணவர்கள் சார்பில் லோக்மான்சிங் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment