சேலம் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 06.02.2023-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இந்திலி அருகே விபத்து ஏற்பட்டு விட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சின்னசேலம் காவல்துறையினர் விரைந்து சென்று விபத்து ஏற்பட்ட இடத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விபத்து நடந்த இடத்தில் விசாரணை செய்ததில் TN 77 0077 என்ற பதிவென்கொண்ட (Mahindra) காரின் ஓட்டுநர் முத்துலிங்கம்(30) த/பெ ராயர், ராமநாயக்கண்பாளையம், ஆத்தூரை சேர்ந்தவர் காரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிவந்து PY 01 AY 0835 என்ற பதிவென்கொண்ட இருசக்கர வாகனத்தில் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது தெரியவரவே ஓட்டுநரை கைது செய்து, காரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 490 கிலோ (மதிப்பு 9,84,000/-) குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிந்து குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து. குட்காவை கடத்திய குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி சென்றலோ, விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment