சங்கராபுரத்தில் தைப்பூசத் திருவிழாவில் அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,பிப்,06.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கல்லை நெடுஞ்சாலையில் உள்ள திருவருட்பிரகாச வள்ளலார் தருமச்சாலை அறக்கட்டளை சார்பாக தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.நிகழ்வின் தொடக்கமாக காலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு சம்புலிங்கம், பச்சையாப்பிள்ளை குழுவினர் அகவல் ஓதினர்.அதனைத்தொடர்ந்து நெடுமானூர் பாரதியார் தமிழ் சங்கத் தலைவரும் குழந்தைக் கவிஞருமான கதிர்வேல் சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் 11.00 மணியளவில் சங்கராபுரம் பேரூராட்சிமன்றத் தலைவர் ரோஜா ரமணி தாகப்பிள்ளை மற்றும் வட சிறுவள்ளூர் ஒன்றியக் குழு உறுப்பினர் குமாரி பன்னீர்செல்வம் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தனர்.11 மணிக்குத் தொடங்கிய அன்னதானம் 4.00 மணிவரை நடைபெற்றது.சுமார் 3000 பக்தர்கள் வள்ளலாரின் தீப ஒளியை தரிசித்து உணவு உண்டனர். மாலை 6.00 மணிக்கு தீப ஆராதனை வழிபாடு செய்யப்பட்டது. நிறைவாக அறக்கட்டளையின் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment